Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய தேர் திருவிழா

வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய தேர் திருவிழா

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் 9 ஆவது நாளான நேற்று (10) தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூசைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளிய நிலையில் பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரானது ஆலயத்தை சுற்றியதுடன், ஊரில் உள்ள முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு தரிசனம் வழங்குவதற்காக ஊரை சுற்றி வலம் வந்தது.

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேரானது பாடசாலை வீதி வழி மற்றும் பாசிக்குடா வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்ததுடன், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு கடந்த புதன் கிழமை 2 ஆம் திகதியன்று கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் ஆரம்பமானது. பிரமோற்சவத்தின் 7ஆவது நாள் திரிசூல வேட்டைத் திருவிழா இடம்பெற்றதுடன். இன்றைய தினம் தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.

பூசைகள் யாவும் பிரதம குருபிரதிஸ்டா பூசணம்,ஜோதிட ரத்னாகரம், வேத ஆகம கிரியா அலங்கார பூசனம் சிவஸ்ரீ குமார பிரபாகரக் குருக்கள் மற்றும் ஆலய குரு சக்தி பூஜா துரந்தர்,சிவன் அலங்கார திலகம்,வாமதேவ சிவாச்சாரியார சிவஸ்ரீ ப.கண்ணன் குருக்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
Next Post
வடமாகாணத்தில் அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு

வடமாகாணத்தில் அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு