Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடமாகாணத்தில் அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு

வடமாகாணத்தில் அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தற்காலிக அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடமுடியாது என்று வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியான அறிக்கையில் மேலும்,

அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தற்காலிக அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவையில் பயணிப்பவர்கள் இவ்விடயம் தொடர்பில் கருத்திற்கொள்வதன் மூலம் தமக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்து கொள்ள முடியும்.

வடமாகாண ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவையை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அலுவலர்களுக்கான விசேட போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பேருந்துகளுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான படிமுறைகள் தொடர்பான பத்திரத்துக்கு 3.3.2025 அன்று வடமாகாண ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந் நடைமுறைகள் 2016ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நியதிச்சட்டத்தின் பாகம் III இன் பிரிவு II, பிரிவு 44 மற்றும் 2016ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க வடக்கு மாகாண வீதிப்யணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவையில் ஏற்கனவே ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அனைத்து பேருந்துகளும் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவைக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.

அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவைக்குரிய தற்காலிக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பபடிவங்களை வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்வதற்கு 30.4.2025 வரை கால அவகாசம் வழங்கப்படுகின்றது.

01.05.2025 இற்கு பின்னர் அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் யாவும் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தற்காலிக அனுமதிப்பத்திரமின்றி சேவையாற்றும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவையில் பயணிப்பவர்களும் இவ்விடயம் தொடர்பில் கருத்திற்கொள்வதன் மூலம் தமக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளமுடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

August 10, 2026
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

August 10, 2026
சாகர காரியவசம் பிணையில் விடுதலை
செய்திகள்

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

August 10, 2026
வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ
செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ

August 10, 2026
புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
Next Post
ருஸ்தி கைது விவகாரம் முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது; எம்.பி உதுமாலெப்பை

ருஸ்தி கைது விவகாரம் முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது; எம்.பி உதுமாலெப்பை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.