Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!

பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அழைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகர காரியவசம், தான் தெரிவிக்காத கருத்துகளைத் திரிபுபடுத்தி தவறான அர்த்தங்களை உருவாக்கி, அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமது கருத்துகளைத் திரிபுபடுத்தி எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இவ்வாறான அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இதுபோன்ற அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட உலகத் தலைவர்கள் இறுதியில் மோசமான விளைவுகளை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அதே பாதையில் பயணிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்ததும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரலாற்றில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறான எதேச்சதிகார நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து மக்கள் தெளிவான புரிதலைக் கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மக்கள் இதற்கு உரிய பதிலை வழங்குவார்கள் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

September 24, 2026
புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!
செய்திகள்

புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

September 24, 2026
மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்
செய்திகள்

மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

September 24, 2026
இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!
உலக செய்திகள்

இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!

September 24, 2026
ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி
உலக செய்திகள்

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி

September 24, 2026
Next Post
காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!

காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு