முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தற்போது அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருப்பதற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அதேவேளை, அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக இதற்கு முன்னரும் மைத்திரி குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.