கடந்த காலத்தில் முள்ளிவாய்க்கால் பேர் அவலத்தின் போது ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து கிரிபத்து உண்டு வெடி கொழுத்தி மகிழ்ந்ததுடன் பிள்ளையான், கருணா குழுவுடன் இணைந்து மேடைகளில் ஏறி வாக்குகேட்டு பிரச்சாம் செய்ததுடன் சின்னவத்தை விகாரையை கட்டுவதற்கு அழைப்பு விடுத்தவர்கள் தமிழ் தேசிய உடையை போட்டுக் கொண்டு இன்று வெள்ளைவேட்டி சேட்டுன் மாலை போட்டு நாடகமாடி வருகின்ற இவர்களின் கதைக்கு ஒரு போதும் தமிழ் மக்கள் ஏமாறக் கூடாது என தமிழ் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வவுணதீவு பிரதேச சபை வேட்பாளர் செல்வகுமார் தலைமையில் ஆயித்தியமலை நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற தியாக தீபம் அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தலில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விடுலைப் போராட்டம் என்பது இலங்கை இராணுவத்தின் பலத்தின் ஒரு சம பலத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் அதனடிப்படையில் அரசாங்கம் பேச்சுவார்தைக்கு அழைத்து நோர்வே போன்ற நாடுகள் எங்களை மழுங்கடிக்க செய்து பெரிய இனழிப்புக்கு உட்படுத்தியுள்ளது.
ஆகவே இதற்கான பரிகாரங்களை சர்வதேசத்தில் இருக்கின்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும் அதற்கான நகரதல்களை செய்ய வேண்டுமாக இருந்தால் ஒரு சரியான தலைமைத்துவம் வேண்டும் அந்த கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னம் இதனை மக்கள் அனைவரும் பலப்படுத்த வேண்டும்.
இன்று ஆட்சியல் இருக்கின்ற அனுர அரசு தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் பிரையோடி கிடந்தாலம் இந்த நாட்டின் பொருளாதாரங்களை மோசடியாக சுரண்டி இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை கைது செய்கின்றனர்.

இது அவர்களுடைய அரசியல் இலாபகமாக இருக்கலாம் அல்லது உண்மையில் இந்த ஊழல் மோசடி செய்தவர்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லுகின்ற நல்ல விடையமாக இருக்கலாம் எனவே ஊழல் மோசடி செய்தவர்களை கைது செய்வதை நாங்கள் வரவேற்கின்றோம்
அதேவேளை நிறைவேற்றப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் சட்டம் ஊடாக இந்த நாட்டில் கொள்ளையடித்த சொத்துக்கள் பறிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
எனவே எங்கள் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமாக இருந்தால் இலஞ்சம் ஊழல் இல்லாது மிக நேர்மையாக நேர்த்தியாக வரழக்கூடிய நிலைக்கு கொண்டு போக கூடிய சமூகத்தை கட்டியழுப்ப உறுதுணையாக இருப்போம் ஆனால் எங்கள் மக்களை மீண்டும் ஏனைய அரசுகள் போன்று நீங்களும் இன அழிப்பு செய்தற்கான செயற்பட்டால் நாங்கள் அதை எதிர்கின்ற விதமாக செயற்படுவோம்.
அதேவேளை தமிழ் மக்கள் சம உரிமையோடு வாழ்வதற்கு அரசியல் தீர்வு திட்டத்துக்கு அரசாங்கம் செல்ல வேண்டும் மாறாக தமிழர்கள் 76 வருடங்களாக எதிர்த்து வருகின்ற ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்காக இந்த அரசு தொடர்ந்து செயற்படுமாக இருந்தால் நாங்கள் நாங்களாக முடிவெடுக்கும்
சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.
அதேவேளை இந்தியா கொண்டுவந்த 13 வது திருத்தச் சட்டம் ஒரு இனத்துக்கு சார்பானது அது தோல்வியடைந்துள்ளது எனவே தமிழ் மக்கள் நீண்ட காலமாக தீர்வாக கொண்டுவருகின்ற சமஸ்டி முறையிலான தீர்வை உருவாக்க வேண்டும் அதனை இந்தியா கரிசனை செய்யவேண்டும் என தமிழ் மக்களின் விருப்பம் என்பதுடன் வடக்கு கிழக்கில் இந்தியாவை தவிர எவரும் கால்வைக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

கடந்த காலத்தில் சிங்கள தேசத்துடன் சேர்ந்து இயங்கிய பிள்ளையான், கருணா ஒட்டுக்குழுக்கள் இந்த மண்ணிலே அரங்கேற்றிய படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போன செயற்பாடுகள் அனைத்தும் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது கடந்த காலத்தில் மாவட்டத்தில் எத்தனையே பேரை பிடித்து உயிருடன் தீயிட்டு கொலை செய்ததுடன் திருகோணமலையில் வர்சா என்கின்ற சிறுமி, மட்டக்களப்பில் ஒரு சிறுமி இப்படி ஏகப்பட்ட படுகொலைகளை செய்திருக்கின்றார்.
அவர் தனது பதவிக்காகவும் சுயநலத்துக்காகவும் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதற்காக இந்த படுகொலைகளை செய்துள்ளார் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு கூட ஒரு இளைஞனை கொலை செய்த சம்பவம் இருக்கின்றது எனவே இப்படிப்பட்ட கயவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் இதனுடன் தொடர்புபட்ட அனைவரும் கைது செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அண்மை காலமாக எமது கட்சியுடன் தமிழரசு கட்சி மற்று தமிழ்தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகளைச் சேர்ந்த பலர் இணைந்து கொண்டிருக்கின்றனர் எனவே தமிழ்களுக்கான இறுதி தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
கடந்த காலத்தில் முள்ளிவாய்க்கால் போர் அவலத்தின் போது ராஜபக்ஸ குடும்பத்துடன் இணைந்து கிரிபத்து உண்டு வெடி கொழுத்தி மகிழ்ந்தவர்கள் இன்று தமிழ் தேசி உடையை போட்டுக் கொண்டு நாடகமாடி வருகின்ற இவர்கள் கடந்த காலங்களில் 2009 ,10,12, காலப்பகுதிகளிலே இங்கிருந்த ஒட்டுக் குழுவாக இருந்த பிள்ளையான், கருணா குழுவுடன் இணைந்து மேடைகளில் ஏறி வாக்குகேட்டு பிரச்சாம் செய்த இவர்கள் அவர்களுடன் இணைந்து பல கொள்ளை கொலைகளில் சம்மந்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறே சின்னவத்தை விகாரையை கட்டுவதற்கான அழைப்பினை செய்த இப்படிப்பட்ட நபர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பியுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
இவ்வாறானவர்கள் இப்போது வெள்ளைவேட்டி சேட்டுன் மாலை போட்டு தேர்தல் களங்களில் பெரிய வீராப்புக்கள் பேசிக் கொண்டிருக்கின்ற இவர்களது கதைகளுக்கு ஒரு போதும் தமிழ் மக்கள் ஏமாறக் கூடாது ஏன் என்றால் இவர்கள் தமிழ் தேசிய நிலைப்பாடுடன் இல்லை ஆனால் தமிழ் தேசிய உடையை பலர் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எனவே இவ்வாறு பிழையானவர்களுக்கு அதிகாரம் கொடுத்ததால் தான் நாடு இந்தளவுக்கு போயுள்ளது எனவே விழிப்பாக இருந்து கொடுக்கப்படும் அதிகாரங்கள் ஒரு சரியான நபர்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.