Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
NPP யும் JVP யும் வேறுவேறு எனக்கூறும் பிமல் ரத்நாயக்கவிடம் ஒரு கேள்வி?

NPP யும் JVP யும் வேறுவேறு எனக்கூறும் பிமல் ரத்நாயக்கவிடம் ஒரு கேள்வி?

1 year ago
in செய்திகள்

தமிழ் மக்கள் சின்னச் சின்ன விடயங்களுக்கு எல்லாமும் இனவாதம் பேசுவதாக பிமல் ரத்நாயக்க கூறுகிறார். ஆனையிறவு உப்பிற்கு ‘ரஜ லுணு’ என்று அரசாங்கம் பெயர் சூட்டி சந்தைக்கு விட்டால், அது தொடர்பில் கேள்வி கேட்கக் கூடாது.

அப்படிக் கேட்டால், அது தமிழ் இனவாதம். தையிட்டியில் தனியார் காணிகளில் அத்துமீறி ஆக்கிரமித்து கட்டப்பட்ட விகாரையை அகற்றக் கோரினால், அது தமிழ் இனவாதம். இப்படியெல்லாம், தேசிய மக்கள் சக்தியின் பிமல் ரத்நாயக்க தமிழ் மக்களை நோக்கி அரசியல் வகுப்பு எடுக்கிறார். அதனை எதுவும் எதிர்க் கேள்வி கேட்காமல் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்க் கட்சியை நோக்கியும் ஊழல் விசாரணைகளை முன்னெடுத்து அடக்கி ஒடுக்குவோம் என்கிற அகங்கார தொனியை அவர் வெளிப்படுத்துகிறார்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் பார்த்து எடுக்கப்பட வேண்டியவை அல்ல. ஊழலை யார் புரிந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த ஊழல்களினால் நாட்டு மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட துரோகங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதனைவிட்டு, வாக்கு அரசியல் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்பது என்பது தென் இலங்கையின் கடந்த கால அரசாங்கங்களின் வழக்கமான நடவடிக்கைகளாகும்.

அதனைத்தான், தங்களுக்கு எதிரான அரசியல் எதிரிகள் என்று கருதும் தரப்புக்களை நோக்கி தேசிய மக்கள் சக்தியும் ஏவ நினைக்கின்றது. தென் இலங்கையில், இந்தப் பூச்சாண்டிப் பேச்சுக்களுக்கு கட்சிகள் பயப்படலாம். ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏன் பயப்பட வேண்டும்? இந்த அச்சுறுத்தலை அவர், சிலவேளை இராணுவத்தின் துணைக்குழுக்களாக இயங்கிய தரப்பினரை நோக்கிச் சொல்லியிருந்தால், அது ஏற்புடையது.

ஏனெனில், இராணுவத்தின் துணைக்குழுக்களின் மோசடிகள், அத்துமீறல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்கு தெரிந்த அளவுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. ராஜபக்ஷக்களோடு ஆரம்ப கட்டங்களில் இணக்கமாக பயணித்து, நாட்டில் இறுதி மோதல்களை ஆரம்பித்து வைத்து, ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படவும், காணாமற்போகவும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வித்திட்டது.

அப்போது, அவர்களுக்கு ராஜபக்ஷக்களின் படுகொலைக் கலாசாரம், அதன் பின்னணிகள் தொடர்பில் தெளிவான புரிதலும் விளக்கமும் இருந்திருக்கும். இப்போது, தன்னுடைய அடையாளத்தை தேசிய மக்கள் சக்தியாக மாற்றிக் கொண்ட பின்னர், தங்களின் கடந்த கால கறுப்பு வரலாறுகள் எல்லாமும் மறைந்துவிடும் என்று அவர்கள் நம்புவது அற்பத்தனமானது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
Next Post
கிளிநொச்சியில் பெய்த கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

கிளிநொச்சியில் பெய்த கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.