கிழக்கு பல்கலைக்கழத்திற்கான 11 வது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் நேற்று (29) பல்கலைகழகத்தில் இடம்பெற்றது.
இதில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், உட்பட 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைகழக மானிய ஆணைக் குழுவிற்கு அனுப்பியுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தேர்தலில் 8 பேர் களமிறங்கினர், இவர்களுக்கான நேர்முக பரீட்சை நேற்று பல்கலைகழக பேரவையினால் நடத்தப்பட்ட நிலையில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், இரண்டாவதாக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், மூன்றாவதாக பேராசிரியர் தற்போதைய சௌவ்கிய பீட பீடாதிபதி தில்லைநாதன் சதானந்தன் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டு அந்த பெயர்பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பியதையடுத்து ஜனாதிபதி மூவரில் ஒருவரை உப வேந்தராக தெரிவு செய்து அதற்கான நியமனத்தை வழங்குவார்.