கல்கிஸ்ஸை, ஹுலுடகொட பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரத்மலானை மஹிந்தராம வீதியில் வசித்து வந்த 23 வயதுடைய கவிந்த கயாஷன் ரணவக்க என்ற டிகிரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவரின் தாயார், தனது மகனைக் காணவில்லை என்று கல்கிஸை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.