குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடவுச்சீட்டு விநியோகப் பணிகளில் இன்று (11) முற்பகல் தற்காலிக தடங்கல் ஏற்பட்டுள்ளது.
கணினி அமைப்பு திடீரென செயலிழந்ததன் காரணமாக கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், கணினி அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டுத் தலைவர் சமிந்த பத்திராஜ தெரிவித்துள்ளார்.








