நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண்ணொருவரைக் கைதுசெய்ய முடியாத நிலையில் அவரது எட்டுவயதுக் குழந்தை பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் வெலிஓயா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வெலிஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் வசிக்கும் பெண்ணொருவருக்கு நீதிமன்றம் மூலம் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணின் வீடு தேடிச் சென்ற போது, அவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த எட்டு வயதுக்குழந்தையை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து தடுத்து வைத்துள்ளனர்.
அதன் பின் குழந்தையின் தாயார் வந்து பொலிஸில் சரணடைந்த பின்னரே குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
எனினும் குழந்தையின் தாயார் பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தர்ப்பத்தில் குழந்தை தனிமையில் இருந்த காரணத்தினால் அதன் பாதுகாப்புக்காகவே பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.