1898 ஆம் ஆண்டு லும்பினிக்கு அருகிலுள்ள ஒரு பழங்கால தூபியில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் நினைவுச்சின்னங்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தினக் குவியல் ஹொங்கொங்கில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
சோத்பிஸ் நடத்தும் இந்த ஏலத்தில் கிட்டத்தட்ட 1,800 முத்துக்கள் மற்றும் பல்வேறு வகையான இரத்தினக் கற்கள் ஏலத்திற்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஏலத்தை உலகம் முழுவதும் உள்ள பௌத்த சமூகத்தினர் கடுமையாக எதிர்த்துள்ளதாகவும், அந்த எதிர்ப்புகளைக் கருத்தில் கொள்ளாது இந்த ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஏலம் மே 7 ஆம் திகதி தொடங்கும், என்றும், தொடக்க ஏலம் 100 டொலர்கள் மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.