சமந்த ரணசிங்க சற்று நேரத்திற்கு முன்பு சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் இடத்திற்கு சமந்த ரணசிங்க இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ரம்புக்கனை தொகுதி அமைப்பாளராக சமந்த ரணசிங்க பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.