தங்கல்ல – ரன்ன, வடிகல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (08) காலை 7.15 மணியளவில் பேருந்தும் லொரியும் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் பலத்த காயங்களுடன் தங்காலை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மாத்தறையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து, ரன்ன வடிகல பகுதியில் எதிரே வந்த முச்சக்கர வண்டிக்கு வழிவிட முயன்றபோது, சாலையின் இடது புறத்தில் நின்றிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.