நாட்டில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 வரையிலான குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்படுவதாக அமைச்சின் தொற்று அல்லாத நோய்கள் பிரிவின் பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் சமிதி சமரகோன் தெரிவித்தார்.

இன்று (08) உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய வைத்தியர் சமிதி சமரகோன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு தலசீமியா தினம் “தலசீமியாவுடன் சமூகங்களை ஒன்றிணைத்தல், நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்தல்” என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.