மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி இந்தியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பங்களாதேஷ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்
இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 930,794 ஐ எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.