பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இந்திய ராணுவம் இந்த எல்லை ஊடுருவலை சமாளித்து பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கு பாகிஸ்தானே பொறுப்பு”
இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி. தற்போது நடந்துவரும் செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது ,
“கடந்த சில மணி நேரமாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது பாகிஸ்தானின் விதிமீறல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது, போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தானின் செயல் கண்டிக்கத்தக்கது -என்றார் விக்ரம் மிஸ்ரி