தென்னிலங்கையில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பேருவளை, வலத்தர பகுதியில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் இருந்த பெண்ணொருவருக்கும் குறித்த நபருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வாக்குவாதம் முற்றியதில் பெண்ணால் குறித்த நபர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, வீட்டில் ஒருவர் தாக்கப்பட்டு விழுந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்பு, சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய பெண்ணொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.