கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லேகெலே திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மாகாவலி கங்கையில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரகம கும்புக்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று, இந்த கைதி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்வதற்காக மாகாவலி கங்கையில் குதித்துள்ளார்.

இதனையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் இணைந்து மாகாவலி கங்கையில் சோதனை செய்த போது, தப்பிச் செல்ல முயன்ற கைதி நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதை கண்டுள்ளனர்.
இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.