தேசிய மக்கள் சக்தியின் உத்தேச முதலாவது அமைச்சரவை மாற்றத்தின் போது தற்போதைக்குப் பிரபலமாக இருக்கும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகிக்கும் ஹரிணி அமரசூரியவை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் முக்கிய பங்காளியான ஜே.வி.பி.நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் சில வாரங்களுக்குள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த அமைச்சரவை மாற்றத்தின் போது நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல, கைத்தொழில் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் பதவிகளில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் தெரியவந்துள்ளது.