Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகர் உணவகமொன்றில் சட்டத்தரணி வாங்கிய சோற்று பார்சலுக்குள் கரட் கறியுடன் நெளிந்த புழு

மட்டு நகர் உணவகமொன்றில் சட்டத்தரணி வாங்கிய சோற்று பார்சலுக்குள் கரட் கறியுடன் நெளிந்த புழு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பாசலில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று (24) சனிக்கிழமை முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன், கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதரா பரிசோதகர்கள் தெரிவித்தனர்

குறித்த கடையில் வழமையாக மதிய உணவான சோற்று பாசலை சட்டத்தரணி ஒருவர் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் சம்பவதினமான நேற்று பகல் 2.00 மணியளலில் மதிய உணவான சோற்று பார்சலை வாங்கி கொண்டு, தனது காரியாலயத்தில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் உள்ள கரட் கறியில் புழு ஓடுவதை கண்டு கொண்டார்.

இதனையடுத்து கறுத்த புழு சாப்பாட்டு பாசலுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்துக்கு சென்று குறித்த கடைக்கு எதிராக முறைப்பாடு செய்தார். இதனையடுத்து உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கடையை முற்றுகையிட்டு சோதனை செய்ததையடுத்து அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் பல உணவு பொருட்களை குளிரூட்டியில் இருந்து மீட்டனர்.

இவ்வாறு மீட்டகப்பட்ட மனித பாவனைக்கு உதவாத பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க வைத்திருந்தமை மற்றும் மதிய உணவான சோற்று பாசல் புழு இருந்தமை தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தனித்தனியாக கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த காலங்களில் குறித்த உணவு விற்பனை செய்துவரும் கடையில் இருந்து மனித பாவனைக்கு உதவாத உணவுகள் தயாரித்தமை மற்றும் உணவு தயாரிப்பதற்காக பொருட்களை வைத்திருந்தமை, சுகாதார சீர்கேடாக உணவுகளை கையாண்டமை போன்ற பல குற்றச்சாட்டின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்கள் அதன் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் பல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவரை தண்டப் பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

September 25, 2026
பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv
செய்திகள்

பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv

September 25, 2026
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!

September 25, 2026
எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு
செய்திகள்

எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு

September 25, 2026
நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை
செய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை

September 25, 2026
Next Post
அடுத்த வாரம் தான் கைது செய்யப்படப்போவதாக தெரிவிக்கும் நாமல்

அடுத்த வாரம் தான் கைது செய்யப்படப்போவதாக தெரிவிக்கும் நாமல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு