Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிமல் ரத்நாயக்கவை கைது செய்து ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை அனுரமுறியடிக்கவேண்டும்; கம்மன்பில சவால்

பிமல் ரத்நாயக்கவை கைது செய்து ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை அனுரமுறியடிக்கவேண்டும்; கம்மன்பில சவால்

1 year ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.

துறைமுக கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பரிசோதனைகள் ஏதுமின்றி 2025.01.18 ஆம் திகதி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும், அந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என்னவென்பதை உரிய தரப்பினர் வெளிப்படுத்தவில்லை என்றும் சுங்க திணைக்கள சேவை சங்கம் குறிப்பிட்டது.

இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு தான் உத்தரவு பிறப்பித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். பிமல் ரத்நாயக்க கப்பற்றுறை அமைச்சராக இருக்கலாம், ஆனால் சுங்கத்திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது.

இந்த கொள்கலன்களில் ஆயுதம் மற்றும் ஆயுத இணைப்பு கருவிகள் இருக்கலாம் என்ற பாரியதொரு சந்தேகம் எமக்கு காணப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்த கெஹெலிய ரம்புக்வெல மருந்து கொள்வனவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டமை அதுவே முதல்முறையாகும்.

இவ்விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க தலையிடவில்லை. சுயாதீன விசாரணைகளுக்கு இடமளித்து சாதனை படைத்தார். இந்த சாதனையை முடிந்தால் முறியடிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சவால் விடுகிறேன் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
ஆழ்கடலில் மீட்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் – 11 மீனவர்கள் கைது

ஆழ்கடலில் மீட்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் - 11 மீனவர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு