அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு வவுனியா நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நேற்று (06.08.2026) வவுனியா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பாவனையாளர் அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, அரச நிர்ணய விலையான ஒரு கிலோகிராம் அரிசி ரூ.265 ஆக இருந்த நிலையில், ரூ.365க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக பாவனையாளர் அதிகார சபையினால் வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைகளின் பின்னர், குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வர்த்தகருக்கு ரூ.1 இலட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.








