எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது ஏவுதல் தோல்வியடைந்தது.
டெக்சாஸிலிருந்து ஏவப்பட்ட 30 நிமிடங்களுக்குள் ரொக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த ரொக்கெட் இறுதியில் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
எரிபொருள் கசிவு காரணமாக ரொக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டான் ஹவுட் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ரொக்கெட் ஆகும்.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஏழாவது ஸ்டார்ஷிப் ஏவுதல் சோதனையும், மார்ச் 6 அன்று நடைபெற்ற எட்டாவது சோதனையும் தோல்வியடைந்தன.
மார்ச் 6 அன்று எட்டாவது சோதனையின் போது ஸ்டார்ஷிப் தீப்பிடித்து எரிந்ததையடுத்து அருகிலுள்ள நான்கு விமான நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதோடு 240 விமானங்கள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.