Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய மக்கள் சக்தி எமக்கு அநீதி இழைத்துவிட்டது என வடமராட்சி கிழக்கு வேட்பாளர்கள் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி எமக்கு அநீதி இழைத்துவிட்டது என வடமராட்சி கிழக்கு வேட்பாளர்கள் குற்றச்சாட்டு

1 year ago
in செய்திகள்

பருத்தித்துறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தி தமக்கு அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நாங்கள் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டோம்.

தேர்தலுக்கு முன்பு யாழிற்கு எங்களை அழைத்த கட்சி தலைமைகள் தேர்தலுக்கு பின்னர் ஆசனங்களை பிரித்துக் கொடுப்பது தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடியே இறுதி முடிவு எடுப்போம் என வாக்குறுதி தந்து வட்டாரங்களில் அதிக வாக்குகளை பெற தீவிரமாக செயற்படுமாறு கூறி எங்களை அனுப்பிவைத்தனர்.

ஆனால் தேர்தல் முடிவிற்றதன் பின் எங்களுடன் கலந்துரையாடாமல் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் தன்னையும், இன்னொருவரையும் போணஷ் ஆசனத்திற்காக தெரிவு செய்து ஏனைய வேட்பாளர்களிற்கு கொடுத்த வாக்குறுதியில் இருந்து மீறியுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட இருவரும் சொற்ப வாக்குகளையே பெற்றனர். ஆனால் இங்கிருக்கும் நாம் இவர்களை விட அதிக வாக்குகளை பெற்றோம்.

அவ்வாறு இருந்தும் எங்களுடன் கலந்துரையாடி ஆளுமையானவர்களுக்கு கொடுக்காமல் ஒரு திறமையற்ற, ஊழலுக்கு துணைபோவதாக குற்றச்சாட்டு காணப்படும் இணைப்பாளருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

போணஷ் ஆசனத்திற்கான இரண்டு பேரை தெரிவு செய்யும் பொறுப்பு வடமராட்சி கிழக்கு இணைப்பாளரிடம் கொடுக்கப்பட்டவேளை அவர் சக வேட்பாளர்களின் தொலைபேசி இலக்கங்களை தடை செய்து விட்டு, அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் தன்னுடன் இன்னொருவரின் பெயரையும் பதிவு செய்து அனுப்பியுள்ளார்

யாராக இருந்தாலும் தகுதியானவரை, அதிக வாக்குகள் கிடைக்கப்பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்றை ஒழுங்குபடுத்துமாறு கோரியும் அமைப்பாளர் அதனை மறுத்து தன்னிச்சையாக தன்னுடன் இன்னொருவரை தெரிவு செய்துள்ளார்

தேர்தலுக்கு முன்பு எங்களை தேடி வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அமைச்சர் யாரும் இந்த விடையத்தில் இதுவரை மெளனமாக இருக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கினுடைய தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாகிய நாம் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

உங்களை நம்பித்தான் நாங்கள் எங்கள் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து வாக்குக் கேட்டோம்

இன்று அவர்கள் எங்களை பார்த்து கேள்வி கேட்கின்றனர்.

எமது பிரதேசத்தில் அதிக பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவ்வாறு இருக்கையில் மக்கள் எமக்கு அதிக வாக்கு செலுத்தினார்கள். ஆனால் எம்மை விட சொற்ப வாக்குகள் பெற்ற உறுப்பினர்களுக்கு போணஷ் ஆசனம் வழங்கப்படும் போது மக்கள் எங்களுடன் முரன்படுகிறார்கள்.

அவர்களுக்கு நாங்கள் என்ன பதில் கூற?

எமது நிலைப்பாட்டை கூறி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பிவைத்தோம். எந்தவித பதிலும் இல்லை, வேட்பாளர்கள் நாங்கள் யாழில் கட்சியின் அதிகாரிகளை சந்தித்து நியாயம் கோரிய போது கட்சி எடுப்பதுதான் முடிவென கூறி எங்களை அனுப்பிவைத்துவிட்டார்கள்

நாங்கள் பதவிக்காக ஆசைப்பட்டவர்கள் அல்ல, ஆனால் நீதியின்படி நேர்மையின் படி நடந்து கொள்ள வேண்டியது எமது கட்சியின் பொறுப்பல்லவா?

எமது சொந்த பணத்தை அதிகமாக செலவழித்தே தேர்தலில் கட்சிக்காக பாடுபட்டோம். ஆனால் இறுதியில் கட்சியின் முடிவே இறுதி முடிவென கூறி எம்மை ஏமாற்றி விட்டார்கள்.

தேசிய மக்கள் சக்தி ஏனைய வேட்பாளர்களினதும் எமக்கு வாக்களித்த மக்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டு நீதியான நேர்மையான ஒரு முடிவை எமக்கு வழங்க வேண்டும்

அவ்வாறு நீதியை வழங்காமல் எம்மை தேவைக்காக பயன்படுத்தினீர்கள் என்பதனை நன்கு உணர்ந்தவர்களாக நாம் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறுவோம் என தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
குவைத்தில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

குவைத்தில் தங்கியிருந்த 30 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.