மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை நிலவரங்களை ஆய்வு செய்த பின்னர், உள்நாட்டு எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் மாதாந்த விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதுடன், பெட்ரோல், டீசல் மற்றும் ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னர் புதிய எரிபொருள் விலைகள் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








