Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை மற்றும் கம்போடியாவின் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஒதுக்கவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடைபெறும் மோதல்களின் தாக்கத்தால் எந்தக் குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.

கம்போடியாவில் சிரமப்படும் 10 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், இலங்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் ஆசிய அபிவிருத்தி வங்கி விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதித் திட்டத்தின் கீழ், கம்போடியாவின் ‘RISE’ பொருளாதார நிலைத்தன்மைத் திட்டத்திற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனும், இலங்கையின் ‘வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனும் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கான 200 மில்லியன் டொலர் நிதியில், மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தங்களை சமாளிக்க 100 மில்லியன் டொலர் கூடுதல் நிதியுதவியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மூலம் வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்துதல், பொருளாதார மண்டலங்களுக்கு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஏற்றுமதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், இந்த நடவடிக்கைகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவித்து, எதிர்கால வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையின் பொருளாதார மீள்திறனையும் வலுப்படுத்தும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?
செய்திகள்

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

September 14, 2026
Next Post
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.