Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்; அருண் ஹேமசந்திர

நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்; அருண் ஹேமசந்திர

1 year ago
in செய்திகள்

புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

அதேவேளை அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அகதி கைதுசெய்யப்பட்ட சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் தீர்க்கப்படும் எனவும், இச் சம்பவத்தை குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிரிக்குமாறும் அவர் சகல தரப்பினரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இச்சம்பவம் இந்தியாவிலுள்ள முகாம்களிலிருந்து மீள நாடு திரும்புவதற்காகத் தம்மைப் பதிவு செய்திருக்கும் சுமார் 10,000 இலங்கை அகதிகளை அச்சுறுத்தி, அவர்கள் நாடு திரும்புவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, ‘இலங்கைக்குத் திரும்பிய அகதி அந்தஸ்த்தைக்கொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு, குடிவரவுச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நான் அறிவேன்.

எமது நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சூழ்நிலைகளால் அக்காலப்பகுதியில் பாரிய புலம்பெயர்வு இடம்பெற்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இவ்வாறான நபர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், உரிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை, அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் அருண் ஹேமசந்திர அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தற்போது பதிவாகியுள்ள சம்பவம் சட்டத்தின் பிரகாரமும், மனிதாபிமான அடிப்படையிலும் வெகுவிரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் சகல தரப்பினரும் இவ்விவகாரத்தைப் பொறுப்புவாய்ந்த முறையில் அணுகவேண்டும் எனவும், இதனைக் குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!
செய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

June 24, 2026
6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!
செய்திகள்

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

June 24, 2026
உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
செய்திகள்

உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

June 24, 2026
தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!
செய்திகள்

தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!

June 24, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

June 24, 2026
ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
Next Post
அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வடமத்திய மாகாண சபை

அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வடமத்திய மாகாண சபை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.