Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண காணிகளை விடுவித்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசப்பட்ட விடயங்கள்

கிழக்கு மாகாண காணிகளை விடுவித்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசப்பட்ட விடயங்கள்

1 year ago
in மட்டு செய்திகள்

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சு சார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அதன்படி, நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கினார்.

அந்த அடிப்படையில் அங்கு கிழக்கு மாகாண காணிகளை விடுவித்தல் தொடர்பில் பேசப்பட்ட விடயங்களை சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் கீழ்கண்டவாறு பகிர்ந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காயன்கேணி பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அருகில் இராணுவத்தினர் ஓய்வு விடுதி ஒன்றை நிர்மாணித்துள்ளதோடு, இது தொடர்பில் நாம் வினாவிய போது, அந்த ஒய்வு விடுதியை அகற்ற முடியாது என இராணுவம் அறிவித்ததாக அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டாஞ்சேனையில் உள்ள பாடசாலை, பாலயடிவத்தை பிரதேசத்தில் உள்ள வர்த்தக சந்தை, குருக்கள் மடம் பகுதியில் உள்ள பாடசாலை இன்றளவிலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் மயானம் அமையப்பெற்றுள்ள காணியிலும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தனியாருக்கு சொந்தமான காணியிலும் அமையப்பெற்றுள்ளது.

வாகரை பிரதேசத்தில் கடல்படையினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் அளவு எவ்வளவு என்பது தொடர்பாகவும் அதில் எவ்வளவு காணி பயன்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பாகவும் சரியான புாிதல் இல்லை என்பதுடன், வாகரை பிரதேசத்தில் அதிகளவான காணிகள் கடல்படையினருக்கு சொந்தமாக காணப்படுவதால், அந்தக் காணிகமளை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்தேன்.

இந்தக் காணிகள் தொடர்பான விடயங்கள் விாிவாக ஆராயப்பட வேண்டும் என்பதால் இது தொடர்பான விசேட குழுவொன்றை நியமிக்குமாறு சாணக்கியன் கேட்டிருந்தார்.

ஆலையடி பிரதேசத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையும் இராணுவ முகாமிற்குள் அமைந்து காணப்படுவதுடன், இராணுவ முகாமிற்குள் அமைந்துள்ள சில பாடசாலைகளுக்கு பதிலாக மாற்றுப் பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் அவை கிராமத்திற்கு வெளியில் அமைந்துள்ள காரணத்தினால் பல சிக்கல்களை மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் சந்திக்கின்றனர்.

அனைத்து இராணுவ முகாம்களும் அமைந்துள்ள காணிகள் குறித்து மீளப் பரிசீலனை செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் மீண்டும் கலந்துரையாடல் நடாத்தப்படும் எனவும் சபையில் தவிசாளரும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!
செய்திகள்

செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!

August 20, 2026
கல்லடி சுவாமி விபுலானந்தா கல்லூரி மாணவி  தற்கொலை; அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயக்கம் – மட்டக்களப்பில் 7 மாதங்களில் 84 தற்கொலைகள்
செய்திகள்

கல்லடி சுவாமி விபுலானந்தா கல்லூரி மாணவி தற்கொலை; அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயக்கம் – மட்டக்களப்பில் 7 மாதங்களில் 84 தற்கொலைகள்

August 19, 2026
படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்
காணொளிகள்

படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்

August 19, 2026
களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த பலசரக்குக் கடைக்கு சீல்
காணொளிகள்

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த பலசரக்குக் கடைக்கு சீல்

August 19, 2026
கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு
காணொளிகள்

மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு

August 17, 2026
Next Post
25 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாத உணவு அறிமுகப்படுத்திய ஐக்கிய அமீரகம்

25 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாத உணவு அறிமுகப்படுத்திய ஐக்கிய அமீரகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு