Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கர் மற்றும் உதவி வண்ணக்கரைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், தியாகராஜா விக்ரமன் வண்ணக்கராகவும், உதயகுமார் சுவேந்திரகுமார் உதவி வண்ணக்கராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் தேர்தலின் தெரிவத்தாட்சி அலுவலருமான சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், பதிவுசெய்யப்பட்டிருந்த 1,487 வாக்காளர்களில் 768 பேர் வாக்களித்தனர்.

வண்ணக்கர் பதவிக்கான தேர்தலில் 39 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 729 செல்லுபடியான வாக்குகள் பதிவாகின. இதில் நந்தி சின்னத்தில் போட்டியிட்ட தியாகராஜா விக்ரமன் 615 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். கும்பம் சின்னத்தில் போட்டியிட்ட சிவகுரு உமாகேசன் 114 வாக்குகளைப் பெற்றார்.

உதவி வண்ணக்கர் பதவிக்கான தேர்தலில் 45 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதுடன், 723 செல்லுபடியான வாக்குகள் எண்ணப்பட்டன. மயில் சின்னத்தில் போட்டியிட்ட உதயகுமார் சுவேந்திரகுமார் 665 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஓம் சின்னத்தில் போட்டியிட்ட சுகுமார் லக்ஸ்மன் 158 வாக்குகளைப் பெற்றார்.

இதனையடுத்து, தியாகராஜா விக்ரமன் வண்ணக்கராகவும், உதயகுமார் சுவேந்திரகுமார் உதவி வண்ணக்கராகவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

இதேவேளை, கோட்டைமுனை ஆதிசைவ வேளாளர் குல வண்ணக்கர் மற்றும் உதவி வண்ணக்கர் தெரிவுகள் போட்டியின்றி இடம்பெற்றதாகவும், கந்தலிங்கம் புவனச்சந்திரா வண்ணக்கராகவும், இராசசிங்கம் லோகேஸ்வரன் உதவி வண்ணக்கராகவும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்றவர்களும், ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட குல வண்ணக்கர்களும் பின்னர் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன், தேர்தலை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு