யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (19) கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடமிருந்து 160 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கைது, யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் மானிப்பாய், சுதுமலை பகுதியை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மீது மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (20) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.








