Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வலய மட்ட விளையாட்டு போட்டியில் விபரீதம்; இரு மாணவர்கள் மரணம்- பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல்!

வலய மட்ட விளையாட்டு போட்டியில் விபரீதம்; இரு மாணவர்கள் மரணம்- பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியானது வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றிருந்த போது நீர்க்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இன்று(17) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் இரண்டாவது தினமான இன்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்க்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்..

மாணவர்கள் விழுந்ததை அவதாணித்த பிரிதொரு மாணவன் கடமையில் இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடி படையினர், பல்கலைக்கழக மாணவர்கள், கிராம மக்கள் இணைந்து குறித்த மாணவர்களை மீட்டுள்ளனர்.

மீட்க்கப்பட்ட இரு மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன் அவர்கள் மீதும் இறந்த மாணவர்களது உறவினர்களால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்விடத்தில் பல்கலைகழக மாணவர்களும் அதிகமாக பிரசன்னமாகி இருந்தமையால் இரு பகுதியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படவும் ஊடகவியலாளர்கள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இணைந்து இருதரப்பினரையும் சுமூக நிலைக்கு கொண்டுவந்திருந்ததுடன் துனைவேந்தரை பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்தும் அழைத்து சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14வயது மற்றும்,15வயதுடைய மாணவர்களே மரணமடைந்துள்ளார்கள் என்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பூவரங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

தொடர்புடையசெய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
செய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

September 18, 2026
ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
Next Post
தமிழர்களுக்கு எதிராக சுவரொட்டிகள் மூலம் எதிர்ப்பு; நாளை ஒன்று திரள சிங்கள மக்களுக்கு அழைப்பு!

தமிழர்களுக்கு எதிராக சுவரொட்டிகள் மூலம் எதிர்ப்பு; நாளை ஒன்று திரள சிங்கள மக்களுக்கு அழைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு