Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதுமக்களின் முறைப்பாடுகளை விரைவாகப் பெற்றுக்கொண்டு அவற்றுக்கு துரித தீர்வுகளை வழங்கும் நோக்கில், ‘118 பொது பாதுகாப்பு சேவை மையம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த சேவை மையம் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தலைமையில் அமைச்சின் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

பொதுமக்கள் கட்டணமில்லா 118 அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 118.pubsec.gov.lk இணையத்தளத்தின் ஊடாகவோ தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகளையும் இந்த சேவையின் மூலம் முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான தகவல்களையும் இந்த சேவையின் ஊடாக வழங்க முடியும் என்றும், தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு விடயங்களை நேரடியாகக் கொண்டு செல்லவும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொய்யான தகவல்கள் அல்லது தவறான முறைப்பாடுகளை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
Next Post
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு