Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“எங்களது ஸயோனிஸ்ட் எதிரிகள் மிகப்பெரிய தவறிழைத்து விட்டார்கள்”; அயத்துல்லா கெமேனி

“எங்களது ஸயோனிஸ்ட் எதிரிகள் மிகப்பெரிய தவறிழைத்து விட்டார்கள்”; அயத்துல்லா கெமேனி

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கெமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் ஈரான் நாட்டின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கெமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கெமேனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “எங்களது ஸயோனிஸ்ட் எதிரிகள் மிகப்பெரிய தவறிழைத்து விட்டார்கள். பெரும் குற்றம் புரிந்துள்ளார்கள். இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டிய நாடு. தண்டனை தொடர்கிறது.” என்று பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த எச்சரிக்கைப் பதிவில் அமெரிக்காவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இருப்பினும் ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அமீர் சையத் இராவானி கூறுகையில், “அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும். எந்த நேரத்தில், எத்தகைய தாக்குதல் நடத்தப்படும் என்பதை ஈரான் இராணுவம் முடிவு செய்யும்.” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்​தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்​ட நிலையில் கெமேனி இந்த எச்சரிக்கப் பதிவை பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, “அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் அணுசக்தி தளங்களில் யுரேனியம் செறிவூட்டப்பட்டு வந்தது. ஈரான் அணுகுண்டு தயாரித்தால், மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்க ராணுவம் துல்லியதாக்குதல் நடத்தியது. இதில், 3 தளங்களும் அழிக்கப்பட்டுள்ளன. ஈரான் உடனே அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால், அந்த நாட்டின் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும்.” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

அமெரிக்க தாக்குதலை அவுஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்துள்ளன. ரஷ்யா, துருக்கி, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
அம்பாறையில் வயல் ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

அம்பாறையில் வயல் ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு