ஈரானின் அணு உலை மீது அமெரிக்கா நடத்தியத் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனுடனான தொலைபேசி உரையாடலில், கடந்த வார இறுதியில் நடந்த இந்தத் தாக்குதல்களை சர்வதேச குற்றமாக குறிப்பிட்டுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், ஒரு நாட்டின் அணு உலை வசதிகளைத் தாக்குவது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், அமைதி மற்றும் உரையாடலை விரும்புவதாகக் கூறப்படும் உரிமைகோரல்களின் வெறுமையை அம்பலப்படுத்துவதாகவும் பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் தனது அணு உலை திறனை பூஜ்ஜியமாகக் குறைக்காது எனவும் ஆக்கிரமிப்புக்கு பதிலடி ஆரம்பத் தாக்குதல்களை விட மிகக் கடுமையாக இருக்கும் என்றும் மெக்ரோனிடம் எச்சரித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிற உலகத் தலைவர்களுடனான உரையாடல்களிலும், அணு உலை வசதிகளை இலக்கு வைப்பது சட்டவிரோதமானது என்று பெசெஷ்கியான் மீண்டும் கூறியுள்ளார்.
சேவைகளை திறமையாகவும் திறம்படவும் பெற, இந்த சேவையைப் பயன்படுத்தும்போது உடனடியாக பொலிஸ் உதவி பெற வேண்டிய சூழ்நிலைகளைக் கண்டறிந்து, உரிய புரிதலுடன் செயல்படுமாறு பொலிஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.








