வைத்தியசாலை மருந்துக்களை அதிக விலைக்கு விற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி சுரசிங்க விஜேரத்ன உட்பட மூன்று சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பங்களை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) நிராகரித்ததுடன் ஜூலை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.








