Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக்குழுவினர் இன்று (22) அங்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதனையொட்டி, மயானத்துக்கு வெளியே அமைந்துள்ள ஏ-9 வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உள்ளக விசாரணை நடைமுறைகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், சித்தப்பாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மற்றும் புதிய ஆதாரங்கள் கண்டறியப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர்கள், உண்மையை வெளிக்கொணர சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை அவசியம் என கோரிக்கை விடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே, மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் இருவரை சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தூதுக்குழுவினரிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்க முயன்றபோதும், அவர்கள் எந்தவித கருத்தையும் வெளியிடாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
Next Post
‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

'இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்'; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு