Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை; உளவுத்துறை தகவல்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை; உளவுத்துறை தகவல்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரானின் மூன்று அணு ஆயுத கட்டமைப்புகளை அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாகத் தாக்கி அழிக்கவில்லை என உளவுத்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள 3 அணுசக்தி தளங்களை பங்கர் பஸ்டர் குண்டுகள் மூலம் அழித்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் இந்தத் தாக்குதலால் ஈரானுக்கு சில பின்னடைவை மட்டுமே கொடுக்க முடியும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிக்கவில்லை என்றகூற்றுக்கு டொனால்ட் ட்ரம்பும் வெள்ளை மாளிகையும் கடுமையாக எதிர்த்துள்ளன.

இந்தக் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “அந்த அறிக்கை போலியானது. வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றை இழிவுபடுத்தும் முயற்சி இது. ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன!” எனப் பதிவிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், “அறிக்கை முற்றிலும் தவறான ஒன்று. ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க மேற்கொண்ட துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்தும் முயற்சியாகும்.

14 குண்டுகள் ( தலா 13,000 கிலோ எடையுடன் உள்ள குண்டுகள்) இலக்குகளை நோக்கித் தாக்கும் போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.

இருப்பினும், ட்ரம்ப் தரப்பில் இதுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ட்ரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ‘தேசத்துரோகம்’ என்று கூறியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது; நடிகர் விஜய் ஆண்டனி

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது; நடிகர் விஜய் ஆண்டனி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு