Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (27) ஆயிரக்கணக்கான அடியார்களின் படைசூழ நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் 02ஆம் திகதி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள நிலையில் கடந்த 23ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் இன்று தொடக்கம் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட ஆடிஅமாவாசையில் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியையும் கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இன்று (27) தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வரையில் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுளள்து. இன்று காலை தொடக்கம் அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்த எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆலயத்தின் பிரதமகுருக்கள் மற்றும் சிவாச்சாரியர்கள், ஆலய வண்ணக்கர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வினை தொடர்ந்து பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வில் பங்கெடுத்துவருகின்றனர்.

அதேசமயம் எதிர்வரும் (02) ஆம் திகதி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
வடக்கில் காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

வடக்கில் காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு