Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஆரையம்பதியில் கர்ப்பிணி தாய்மாருக்கான போஷாக்கு உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

மட்டு ஆரையம்பதியில் கர்ப்பிணி தாய்மாருக்கான போஷாக்கு உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தும் விழிப்புணர்வு திட்டம் ஒன்றை சுகாதாரமற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்தவினால் மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலில் இந்த விசேட திட்டம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டுவருகின்றது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போஸாக்கற்ற கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்கு உணவுகளை பற்றி விழிப்புணர்வூட்டும் விசேட திட்டமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கர்ப்பிணித்தாய்மாருக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டங்களும், கண்காட்சிகளும் விழிப்புணர்வு ஊர்வலங்களும், செயலர்வுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய ஆரயம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று (26) கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக் உணவுகளை விழிப்புணர்வூட்டும் கண்காட்சி யொன்று நடைபெற்றது.

ஆரயம்பதி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி தேவசிங்கம் திலக்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி தெட்சன கௌரி தினேஷ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த கண்காட்சியினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய தாய் சேய் நலன் வைத்திய அதிகாரி கே.கிருசுதன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த சத்துணவு கண்காட்சியில் கர்ப்பிணி தாய்மார்கள் உட்கொள்ள வேண்டிய சத்துணவுகள் சிறுபிள்ளைகளைக் கொண்டுள்ள தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு வகைகள் சத்துணவு வகைகள், கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு