கச்சதீவை இலங்கை அரசிடமிருந்து மீட்டு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்படும் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடற்றொழிலாளர்கள் மாநாடு இன்று (18.08.2023) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து கச்சதீவு இலங்கை அரசில் இருந்து மீட்டு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட பத்து சிறப்பு திட்டங்களுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடற்றொழிலாளர்கள் முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதோடு, கடற்றொழிலாளர்கள் சமுதாயத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளும், தமிழகத்தின் கடலோரப் பகுதியிலுள்ள 14 மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்