Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளி; பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஒன்பது மாதங்களாக சிறையில் உள்ள மாணவன்

இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளி; பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஒன்பது மாதங்களாக சிறையில் உள்ள மாணவன்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேலிய கொடி மிதிக்கப்படும் காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தனியார் கல்லூரி மாணவன் ஒருவர் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாவனெல்லாவைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து மாணவரான 21 வயதான முகமது ரிஃபாய் முகமது சுஹைல் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு கடந்த ஒன்பது மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாவனெல்லாவைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து மாணவரான சுஹைல், தனது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாததற்காக 2024 ஒக்டோபரில் இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில் தெஹிவாலா கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது அடையாள அட்டை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், நீதிமன்றம் முன்பு அவரை பிணை இல்லாமல் விடுவித்த போதிலும், இன்ஸ்டாகிராம் வீடியோ தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மாணவன் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் மாணவர் தொடர்பில் முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், குற்றத்திற்கான எந்த ஆதாரத்தையும் பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவரது குடும்பத்தினரும் முறைப்பாடு அளித்துள்ளனர். குற்றச்சாட்டு இல்லாமல் நீட்டிக்கப்பட்ட விளக்கமறியல் தொடர்பில் உரிமைகள் குழுக்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவரது வழக்கு இன்று (9) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம்: சீமான்

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம்: சீமான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு