Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள்

டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள்

1 year ago
in செய்திகள்

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் தொடர்பில் நேற்று முன்தினம் (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 226 பாடசாலைகள் நுளம்பு மற்றும் நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்களாவர்.

இந்நிலையில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துக்கமைய நேற்று முதல் (9) அனைத்து பாடசாலைகளிலும் சுத்தம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது சுமார் 1 இலட்சத்து 44 ஆயிரத்து 250 இடங்கள் அதிகாரிகளினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன்,

இதன்போது 35 ஆயிரத்து 495 பகுதிகள் நுளம்புகள் பல்கிப் பெருகக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

4,275 பகுதிகளில் நுளம்புக் குடம்பிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அத்தோடு 3812 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 982 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 25 சதவீதமான வீடுகள் டெங்கு அபாயமிக்க இடங்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது வீடுகள் ஓரளவு பாதுகாப்பான நிலைமையில் உள்ளது.என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
Next Post
பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிகப்பட்டது

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிகப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு