Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்ப் சூரிய குளியலில் ஈடுபடும் போது அவரை கொல்வது எளிது; ஈரானின் மூத்த ஆலோசகர்

ட்ரம்ப் சூரிய குளியலில் ஈடுபடும் போது அவரை கொல்வது எளிது; ஈரானின் மூத்த ஆலோசகர்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவரது வீட்டில் சூரிய குளியலில் ஈடுபடும் போது, டிரோன் தாக்குதலின் மூலம் அவரை கொல்வது மிகவும் எளிதான ஒன்று என்று ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி கூறியிருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் அமெரிக்க தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போரின் போது, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது அந்நாட்டை ஜீரணிக்க முடியாத விஷயமாக மாறியுள்ளது. எனவே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிராக ஈரான் தலைவர்கள் வெளிப்படையான மிரட்டல்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரான் நாட்டு ஆட்சியாளரான அயதொல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்து பேசிய விஷயம் தற்போது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது; புளோரிடாவின் உள்ள அவரது வீட்டில் ட்ரம்ப் நீண்ட நேரம் சூரிய குளியல் போட முடியாது. ஏனெனில், அவர் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம். இது மிகவும் எளிமையான விஷயம்,’ என்று கூறினார்.

கடந்த 2020ம் ஆண்டு ஈரான் தளபதி சுலைமாணியை ட்ரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனிடையே, ஈரான் தரப்பில் சுமார் ரூ.225 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. ஈரான் ஆட்சியாளர் கமேனிக்கும், கடவுளுக்கும் எதிரானவர்களை அழிப்பதற்காக இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஈரான் மக்களும், வெளிநாடுகளில் வசிக்கும் ஈரானியர்களும் இதற்காக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரான் மிரட்டல் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையில் அது ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறிய ஜனாதிபதி ட்ரம்ப், தான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் போட்டதாகவும், தனக்கு அதன் மீது ஆர்வமில்லை என்றும் கூறினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!
செய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!

September 15, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

September 15, 2026
முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
Next Post
35 இலட்சத்திற்கு விற்கப்படும் ஆட்டோ வடிவிலான கைப்பை

35 இலட்சத்திற்கு விற்கப்படும் ஆட்டோ வடிவிலான கைப்பை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.