நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கும் தனியார் திரைப்பட அறைகள் அதிகரித்து வருவது, பாரம்பரிய திரையரங்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகத் திரைப்படத் திரையிடுவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
தம்பதிகள் மற்றும் குழுக்களுக்கு மணித்தியாலக் கணக்கில் அறைகள் வாடகைக்கு விடப்படுவதாகவும், இவை முறையான கண்காணிப்பு மற்றும் வரி விதிமுறைகளுக்கு உட்படாமல் இயங்குவதாகவும் சங்கத்தின் தலைவர் அனுராத பி. ரேகவ தெரிவித்துள்ளார்.
மேலும், வயதுக் கட்டுப்பாடுள்ள திரைப்படங்களைச் சிறுவர்கள் பார்ப்பதற்கான ஆபத்தும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இவ்வாறான திரைப்பட அறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூட்டுத்தாபனத் தலைவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








