முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரகித ராஜபக்ஷ தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாகவே வங்கிக் கணக்குகளை முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கடிதத்தை அவரிடம் கையளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளது.
எனினும், அதிகாரிகள் அறிவித்தல் கடிதத்தை வழங்குவதற்காகச் சென்ற சந்தர்ப்பத்தில் ரகித ராஜபக்ஷ வீட்டில் இருக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.








