அம்பாறை – பக்கியெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் போலி ஆவணங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பக்கியெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பக்கியெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து, 04 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 04 தேசிய அடையாள அட்டைகள், 02 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் , சாரதி அனுமதி பத்திரம், 02 பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் ஒரு கிராம சேவையாளர் சான்றிதழ் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஏதேனும் குற்றச் செயல்களுக்காக இந்த போலி ஆவணங்களை வைத்திருந்தாரா என்பது தொடர்பில் பக்கியெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








