அண்மை காலமாக சுங்கத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ ஆவணங்கள், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி பல்வேறு வகையில் மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டில் உள்ள நிறுவனங்கள் சுங்கத் திணைக்களத்தின் பெயர் மற்றும் தகவல்களை பயன்படுத்தி நிதி மோசடிகள் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மை காலமாக சுங்கத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ ஆவணங்கள், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி பல்வேறு வகையில் மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சுதத் சில்வா தெரிவித்தார்.
மேலும்,இனந்தெரியாத நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுவதை தவிர்க்குமாறும், இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் உடனடியாக பொலிஸில் முறைபாடு வழங்கவேண்டும் எனவும் சுதத் சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.