அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மீண்டும் ஒருமுறை அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் கூறுகையில் ,
உலகெங்கிலும் உள்ள பல மோதல் மண்டலங்களில் பல அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் போர் நிறுத்தங்களுக்கு ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்துள்ளார்.
தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளார். அதனால்தான் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்தார்
இதன் போது, ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகவும் லெவிட் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.








