Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாநகரசபையினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மட்டு மாநகரசபையினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.

பொதுமக்களும் தமது பொறுப்பினை உணர்ந்து செயற்படவேண்டும் எனவும் பொதுமக்களும் மாநகரசபையினை முன்கொண்டுசெல்ல முடிந்த உதவிகளை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையினால் கடந்த வருட நிலுவைகளில் உள்ள சோலைவரி மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான வரிகளை அறவிடும் பணிகள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நேற்று (06) ஆரம்பமானது.

கடந்த வருடங்களில் மாநகர சபையின் 20 வட்டாரங்களில் செலுத்த வேண்டிய வரிப்பணம் 90 மில்லியன் நிலுவையுள்ளதனால் அவற்றை அறவிடும் வகையில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஐந்து குழுவாக பிரிக்கப்பட்டு அதனை அறிவிடுவதற்கான பணிகள் நேற்று ஆரம்பமானது.

மேலும் கடந்த வருடங்களான 2022, 2023, 2024 ஆண்டுகளில் மட்டும் 62 மில்லியன் நிலுவை அறவிடாது காணப்படுவதாக மாநகரசபையின் முதல்வர் தெரிவித்தார்.

மக்களின் வசதிகருதி மக்கள் வீடுகளுக்கு மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சென்று நிலுவைகளை அறவிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது மாநகர சபையினால் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், முகாமைத்துவம், வீதி அமைத்தல், மின் விளக்குகளை பொருத்துதல், பாதிக்கப்பட்ட வீதிகளை செப்பணிடுதல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும் மாநகரசபை எல்லைப்பகுதியினுல் கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டத்தை தவிர்ப்பதற்கு மாடுகள் வளப்பவர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் வீதியோர வியாபாரத்தினை தடுப்பதற்கு தேவையான ஆலோசனை வழங்கி வருவதாக மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன், கணக்காளர்கள், நிருவாக உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எமது வட்டார மக்களின் பங்கு பெற்றதோடு நாங்கள் 20 வட்டாரங்களில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளான வீதி அமைத்தல், திண்மக்கழிவு முகாமைத்துவம் செய்தல் வீதிகளுக்கு மின்விளக்குகள் பொறுத்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை செய்து வருகின்றோம்.

இந்த செயற்பாடுகள் அனைத்தும் இந்த 20 வட்டாரங்களிலும் வாழுகின்ற எமது மக்கள் மாநகர சபைக்கு வழங்குகின்ற அந்த வரிப்பணத்தில் தான் செலவிடப்பட்டு அவர்களை தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டு வருகிறது. அந்த வகையிலேயே தற்பொழுது 90 மில்லியன் ரூபாய் மட்டக்களப்பு மாநகர சபையில் நிலுவையாக உள்ளது இந்த 90 மில்லியனும் 77 மில்லியன் ஆதணவரியாகவும் 13 மில்லியன் வியாபாரம் மற்றும் விளம்பரவரியாகவும் காணப்படுகிறது.

ஆகவே இத்தகைய இந்த நிலுவைகளை அரவீடு செய்வதற்காக எமது மாநகர ஆணையாளர் அவர்களின் ஆலோசனையின் கீழ் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் இன்று முதல் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு 20 வட்டாரங்களிலும் உள்ள நிலுவைகளை அறவீடு செய்வதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

அந்த வேலைகளில் ஆரம்ப நிகழ்வு சற்று முன்பு எமது இந்த மாநகர சபையின் முன் மண்டபத்திலே ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

77 மில்லியன் ஆதணவரியிலே 2022, 2023, 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரிய நிலுவை 62 மில்லியன்களாகவும் 2025 ஆம் ஆண்டுக்குரிய நிலுவை 15 மில்லியனாக மொத்தம் 77 மில்லியன்கள் காணப்படுகிறது. எனவே இந்த மாநகர சபை ஊழியர்கள் உங்களின் வசதி கருதி உங்களது இருப்பிடத்திற்கு வந்து இந்த நிலுவைகளை சேகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

நீங்கள் அவர்களை இன்முகத்துடன் நாம் வரவேற்று இது நமது பிரதேசம் நமது மக்கள் வாழுகின்ற இந்த பிரதேசம் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்கின்ற அந்த நல்லெண்ண சிந்தனையோடு நீங்கள் எல்லோரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த நிலுவையினை செலுத்துமாறு மாநகர முதல்வர் என்ற வகையிலே உங்களை மிகவும் பணிவாக வேண்டுகின்றேன்.

மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எட்டு வீதிகளும் அதனோடு இணைந்த எங்கள் கழிவு முகாமைத்துவம் மற்றும் உல்லாச பிரயாண துறை அபிவிருத்தி செய்வதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மாநகர சபையினால் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது.

இது தவிர விழுதிகளில் ஏற்பட்டிருக்கிற குன்றும் குழிகளை நாங்கள் மக்களின் வசதி கருதி அதை நிவர்த்தி செய்கின்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அத்தோடு இன்னும் அடுத்த மாதம் அளவில் நாங்கள் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் மாநகர சபையில் இருக்கின்ற சேகரிக்கப்பட்டிருக்கிற பணத்தை கொண்டு இந்த வட்டார மக்களின் முன்னுரிமை அடிப்படையிலே வட்டார மக்களின் நலன் கருதி அந்தந்த வீதிகளுக்கு வீதிகள் அமைப்பதற்கான பணிகளை நாங்கள் ஈடுபடுத்த உள்ளோம்.

அதற்கு முன்னர் தற்போது மணல் வீதிகளை கிரவல் வீதிகளாக மாற்றும் நோக்கில் புளுஆP அவர்களின் ஆதரவோடு கிரவல்களை கொள்வனவு செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். முதல் கட்டமாக இந்த கிரவல் இடும் பணிகள் இடம்பெறும் அதனைத் தொடர்ந்து தார் வீதிகள் சொப்பனிடும் பணிகள் செய்யப்பட இருக்கின்றது.

உண்மையிலேயே பொதுமக்களால் எங்களுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கட்டாக்காலி மாடுகளின் பிரச்சனை பாரிய ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கின்றது நாங்கள் கடந்த வாரம் இருந்து ஒரு விழிப்புணர்வை அந்த மாடுகளை வீடுகளில் வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு நாங்கள் அந்த விளம்பரங்கள் செய்கின்ற பணிகளில் எங்கள் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு அவர்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எமது கடந்த சபை அமர்வின் போது இதற்கான ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வும் எடுக்கப்பட்டது.

அந்த தீர்வுக்கு அமைவாக இந்த கட்டாக்காலி மாடுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளாக நாங்கள் விளிப்புணர்வு செய்து வருகின்றோம். அவர்கள் அந்த மாடுகள் வீதிகளுக்கு வரும் போது அவர்களுக்கான சட்ட நடவடிக்கையை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்.

வீதி வியாபாரத்தை நாங்கள் முற்றாக எதிர்கிறோம் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் கடந்த கவுன்சிலில் கூட இந்த வீதியோர வியாபாரங்களை தடுக்கும் நோக்கோடு நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம் இருந்தும் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் அது வந்திருந்த நிலையிலே துரதிஷ்டவசமாக எமது கவுன்சிலும் கலைக்கப்பட்டுவிட்டது கடந்த அந்த மூன்று ஆண்டுகளுக்கு பிற்பாடு அந்த மூன்று ஆண்டுகளுக்குள் தான் இந்த வீதியோர வியாபாரம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது உண்மையிலே அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த வீதியோர வியாபாரங்களினால் விபத்துக்கள் ஏற்பட்டு பாரிய பெருமதிமிக்க உயிர்கள் எல்லாம் இழக்கின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன இதை நாங்கள் முற்றாக எதிர்த்து அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு எமது மாநகர சபையின் ஆணையாளர்களிடம் நான் இதைப் பற்றி அறிவித்திருக்கிறேன் அவர்கள் இதை தடுப்பதற்கான முயற்சியாக தற்பொழுது எமது இந்த ஊழியர்கள் அவர்களுக்கு சென்று முதற்கட்டமாக அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்கள்.

அதற்கு முன்பாக அவர்களுக்கான அந்த வீதியை விட்டு அவர்கள் வெளியேறி அவர்களின் வாழ்வாதார விடயமாக இருப்பதன் காரணமாக அவர்களுக்கான ஒரு மாற்றீட்டையும் நாங்கள் செய்வதற்கான முயற்சிகளை தற்பொழுது ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

வீதி மின்விளக்கு களுக்காக 11 மில்லியன் ரூபாய் மாதம் தோறும் நாங்கள் செலுத்தி வருகின்றோம் இது எங்களுக்கு ஒரு பாரிய சுமையாக காணப்படுகின்றது. இந்த வீதி விளக்குகளை அணைப்பது இரவில் போட்டு காலையில் அணைப்பது முன்பு மாநகர சபை ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர் அவர்கள் அதற்கு உள்வாங்கப்பட்டு இருந்தனர் ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறையின் காரணமாக அது தடை செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் ஒன்றை பொதுமக்களிடம் முன்வைக்கின்றோம் பொதுமக்களுக்கும் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வது எமது வீதி மின்விளக்குகளை பாதுகாப்பது என்பன அவர்களுக்கும் அது உணர்த்தப்பட்டுள்ளது அவர்களுக்கும் அந்த சமூக கடமை இருக்கிறது. அவர்களும் இணைந்து இத்தகைய எங்களுடன் இணைந்து செயல்பட்டால் தான் முற்றுமுழுதாக இந்த வீணாண மின்விளக்கு எரிவது போன்ற இந்த வீணாக நாங்கள் செலுத்துகின்ற மின்சார கட்டணங்களையும் நாங்கள் குறைக்க முடியும்.

வீதி வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு நாங்கள் ஒரு விளக்கம் அளித்தகருக்கின்றோம் நீங்கள் உங்களது இந்த வீதி வியாபாரங்களை நிறுத்திவிட்டு மக்கள் ஒன்று கூடுகிற சந்தைக்கு நீங்கள் வாங்கள் உங்களுக்கான அந்த ஒதுக்கிடங்களை நாங்கள் தருவோம் அங்கு வியாபாரத்தை செய்யுங்கள் நீங்கள் அப்படி செய்வதனால் ஏற்கனவே உங்கள் சந்தையில் இருக்கின்ற வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத நிலை ஏற்படும் அவர்கள் சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து நாங்கள் விடுபடுவோம் ஆகவே நீங்கள் நாங்கள் வழங்குகின்ற அந்த கோரிக்கையை நீங்கள் செய்ய வேண்டும் என்றும் அப்படி அவர்கள் செய்யாத பட்சத்தில் அவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்றோம்.

ஆனால் உண்மையிலேயே மட்டக்களப்பு பொதுச்சந்தையை பொறுத்த வரையிலே தற்பொழுது மக்கள் தங்களது சவுகரியம் கருதி ஒவ்வொரு இடங்களிலும் நுகர்வுபொருட்களை அன்றாடம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள் அதனால் குறிப்பிட்ட மாநகர பொதுச்சந்தை ஆனது மிகவும் பிரதானமான ஒரு சந்தை இந்த சந்தைக்கு எல்லாரும் அணுகி அந்த சாமான்களை நாளாந்தம் கொள்வனவு செய்வது என்பது ஒரு கேள்விக்குரிய விடயமாகும் இதன் காரணமாக அங்குள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் குறைவாக இருப்பது உண்மை. எல்லோரும் வீதி ஓர வியாபாரிகள் பொதுமக்கள் சந்தைக்குள் வியாபாரம் செய்கின்ற வியாபாரிகள் எல்லோரும் ஒத்துழைத்து தான் இந்த பிரச்சனையை தீர்வு கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன்.

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் அனேகமானோர் மாநகர அனுமதியினை பெறாது வீடுகளை கட்டியுள்ளனர் இதனால் வெள்ளநீர் வடிந்து ஓடுவதற்கான சரியானதொரு முறைமை காணப்படாமல் இருக்கின்றது. இதற்கு ஒரு மாற்றத்திட்டமாக நாங்கள் கடந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மட்டக்களப்பு வாவியை ஆழமாக்குவதன் மூலம் விரைவாக வெள்ள நீரை கடலுக்குள் கொண்டு செல்லலாம் என ஒரு திட்டத்தை முன் வைத்திருக்கின்றோம்.

அத்தோடு எமது மாநகர சபையில் இருக்கின்ற வளங்கள் அதாவது இயந்திரங்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது ஒரே ஒரு ஜேசிபி மாத்திரம் தான் இயங்கு நிலையில் காணப்படுகின்றது. ஏனைய இயந்திரங்களை திருத்துகின்ற செயற்பாட்டில் எமது பொறியியல் பிரிவு முன்னெடுத்து வருகின்றது. இந்த இயந்திரங்கள் திருத்தியதன் பிற்பாடு நீர் தேங்குகின்ற இடங்களை தூர்வாரி எதிர்காலத்தில் மக்களுக்கு வெள்ள அனர்த்தம் பாதிப்பு ஏற்படாத வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் போயா தினங்களில் எந்த தனியார் வகுப்புகளும் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் இவர்களுக்கான வகுப்புகளை நடத்தலாம் என கோரிக்கையை முன் வைத்திருக்கின்றோம். இருந்தும் எங்களுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அதிகமானவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் ஒரு சில ஆசிரியர்கள் மாத்திரம் தான் இதனை மீறி செயல்படுகின்றார்கள்.

இவர்கள் தொடர்பான விடயங்கள் அமைக்க கிடைக்கப்பட்டிருக்கின்றது அத்தோடு இந்த வாரமும் நடைபெற்ற வகுப்புகள் தொடர்பான விடயமும் நமக்கு கிடைக்கப் பெற்று இருக்கின்றது.

இவற்றை நாங்கள் உற்று நோக்கி நிச்சயமாக அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு முழுதாக இந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது சாதாரண மற்றும் உயர்தர வகுப்புகளை தவிர ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறுவதற்கு சபையின் ஊடாக தீர்மானம் எடுத்து அதனை நிறைவேற்றுவோம் என குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.