கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, காத்தான்குடி நோக்கி பயணித்த சிறிய ரக வேன் ஒன்று இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் ஓட்டமாவடி – நாவலடி, திருக்கொண்டியாமடு பகுதியில் விபத்துக்குள்ளானது.
வாகனம் பாதையிலிருந்து விலகி அப்பகுதியில் அமைந்திருந்த சர்பத் கடைக்குள் புகுந்துள்ளது. ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.



விபத்தில் ஒருவர் லேசான காயம் அடைந்த நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








